திருவள்ளூர் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் மகா உற்சவ விழா 10 நாட்களாக நடைபெற்ற நிலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.