சென்னையில் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹமீது ஹுசேன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் மூலம் பெரும் சதித்திட்டம் தடுக்கப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வுத் துறை (IB), தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து கடந்த வாரம் சென்னையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பிரசாரம் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 ஹிஸ்புத் தஹ்ரீர் (HuT) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை சென்னை காவல்துறை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்துள்ளது.
கைது செய்யப் பட்ட முக்கிய குற்றவாளியான பொறியியல் பட்டதாரியான டாக்டர் ஹமீது ஹுசேன், சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ராயபேட்டை ஜானி ஜான் சாலையில் MODERN ESSENTIAL EDUCATIONAL TRUST என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இந்த அமைப்பின் மூலமாக இவர் கிலாபாத் என்னும் இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்களை இளைஞர்களிடம் தொடர்ந்து பரப்பி வந்திருக்கிறார். இவர் மட்டும் இல்லாமல் இவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் தீவிரவாதத்தை தூண்டும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
டாக்டர் ஹமீது ஹுசைன் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரித்து பல வீடியோக்களை YouTube இல் வெளியியிட்டு வந்திருக்கிறார் என்றும், அவரது தந்தை அகமது மன்சூர் தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் தனிப்பட்ட கூட்டங்களை நடத்தி வந்திருக்கிறார் என்றும், இந்த மூவரும் தொடர்ந்து இஸ்லாமிய மத பிரச்சாரங்களையும், ரகசிய கூட்டங்களையும் நடத்தி இருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் கொடுத்த தகவலின் படி மேலும் மூவரைக் கைது செய்த காவல் துறை, ராயப் பேட்டை, தாம்பரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி, ஏராளமான டிஜிட்டல் ஆவணங்களையும், சிம் கார்டுகளையும் கைப் பற்றியுள்ளனர்.
இவர்கள் எல்லோரும், சர்வதேச இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீர் (HuT) என்ற அமைப்பில் நீண்ட காலமாகவே உறுப்பினர்களாக, இருந்து கொண்டு, இந்திய ஜனநாயகத்துக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிராக, செயல்பட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எல்லோரும் , பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய அடிப்படைவாத இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கின் பிரசங்கங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில் சின்னதாக தொடங்கி “இஸ்லாமிய ஆட்சி அல்லது கலிபாவிற்கு ஆதரவாக இளைஞர்களை மூளை சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராக திசை மாற்றி உள்ளனர்.
தேர்தலும் ஜனநாயகமும் ஹராம் என்ற அடிப்படை இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகளை இளைஞர்களிடம் பரப்பிய இவர்களுக்குப் பின்னால் இன்னும் யார் யார், இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.