டெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு அதிகாலை 5 மணி 35 நிமிடங்களுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து விமான பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வழியில் இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விமானத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.