தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையினால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள இளங்காக்குடி, அக்கறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 100 ஏக்கரில் மிளகாய் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் மிளகாய்ச் செடியில் பூத்திருந்த பூக்கள் உதிர்ந்து கருகின.
இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.