ரஃபா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா. அவை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், அடைக்கலம் தேடி வந்த அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கை கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.
இந்த பயங்கரம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 250 பேர் காயம் அடைந்தனர் .