எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார்.
மருத்துவக் காப்பீட்டுத்துறையில் தாங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இத்துறையில் உள்ள வளர்ச்சி குறித்து ஆலோசித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்குமென எதிர்பார்ப்பதாகவும், இதற்கான அடிப்படை பணிகளை செய்து வருவதாகவும் சித்தார்த் மொஹந்தி குறிப்பிட்டுள்ளார்.