ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஒருங்ணைந்த ஆந்திரா பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமராவின் 101வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாண்ராம் நந்தமுரி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.