புதுச்சேரி காவல் துறை சார்பில் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் குற்றப் பதிவேடு இளைஞர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
“மிஷன் இளமை” திட்டத்தின் ஒரு பகுதியாக பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற போட்டியை டிஜிபி ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் உள்துறை செயலர் கேசவன், ஐஜிபி அஜித்குமார் சிங்கலா, மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.