3 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
அங்கு படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகனந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் பிரதமர், 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலையில் உள்ள குகை ஒன்றில் தியானம் செய்து கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
ஜூன் 4ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.