நெல்லையில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடியூர், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
















