கேரளாவில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தன் எதிரொலியாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 98.4 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியிருந்தது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். தொடர் கனமழை எதிரொலியாக 8 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.