தங்கம் கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், கேரள எம்.பி. சசிதரூர் உதவியாளர் சிவக்குமார் உள்ளிட்ட இருவரை டில்லி சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.