மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும்போது, ஆப்ரேட்டர் ஒருவர் எதிர்பாரதவிதமாக மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
சசுன் நவ்கார் கிராமத்தில், குடிநீர் விநியோக திட்ட பணிகளுக்காக சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
அப்போது அகழ்வாராய்ச்சி இயந்திரம் மீது மண் குவியல்கள் திடீரென விழுந்தன. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மண்ணில் சிக்கிய நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.