திருப்பூரில் குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது.
குடிமங்கலம் அடுத்த பண்ணைக்கிணறை சேர்ந்த மிதன்ராஜ், வினோத் ஆகிய சிறுவர்கள் பீக்கல்பட்டி பகுதிக்கு விளையாட சென்றனர்.
வெகு நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.