சென்னை, எண்ணூரில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூரை சேர்ந்த பிரேம்குமார் – ராஜி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி ராஜி வசிக்கும் வீட்டிற்கு சென்ற பிரேம்குமார், தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ராஜியை , பிரேம்குமார் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
பின்னர் பிரேம்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.