1 கோடியே 34 லட்சம் ரூபாய் முறைகேடு வழக்கில் சிவகங்கை, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.வி மங்கலம் பகுதியைச்சேர்ந்த பிரவீன்ராஜா என்பவர் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் மத்திய அரசின் நிதிக்குழு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை ஊராட்சி செயலர்கள் பெயர்களில் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட பணத்தை பிரவின்ராஜா திருப்பி கொடுத்துவிட்டு மீதமுள்ள 1 கோடியே 34 லட்சம் ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரவீன்ராஜா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.