மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028ஆம் ஆண்டுடன் முடியும் நிலையில் விருப்ப ஓய்வு பெற தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது.
இங்கு 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். கடந்த 1929ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்துக்கான குத்தகைக் காலம் வரும் 2028ல் நிறைவடைகிறது.
இதனால் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதற்கான நோட்டீசை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது.
அதில் விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய அனைத்து பலன்கள் மட்டுமல்லாது, 2023-24 ஆம் ஆண்டுக்கான கருணைத் தொகையும் போனஸ் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.