கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் சஞ்சு டெக்கி, ஒரு திரைப்படத்தில் தாம் நடிக்கும்போது, காரின் பின் பகுதியில் தார்பாலின் கட்டி, தண்ணீரை நிரப்பி, ஓடும் காரில் நீச்சலடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆவேசம் திரைப்படத்திற்காக யூடியூபர் சஞ்சு டெக்கி, காரின் பின் பகுதியில் தார்பாலின் கட்டி, தண்ணீரை நிரப்பி, ஓடும் காரில் நீச்சலடித்தார்.
ஆனால், துரதிஷ்டமாக தண்ணீர் வெளியேறி, கார் நிறுத்தப்பட்டது. இதனால், நெரிசலும் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில் யூடியூபர் சஞ்சு டெக்கியின் ஓட்டுநர் உரிமத்தையும், காரின் உரிமத்தையும் ரத்து செய்து அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.