போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைரபாவில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நிவேதா பெத்துராஜிடம் கார் டிக்கியை திறக்குமாறு கூறினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலான நிலையில் இது பட ப்ரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.