ராமரை அழைத்து வந்த பிரதமர் மோடிதான் மீண்டும் மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், பிரார்த்தனை செய்துவிட்டு, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்,
“பிரதமர் மோடிக்கு ராமபிரானின் ஆசீர்வாதம் உள்ளது” என்றார். ‘ராமரை அழைத்து வந்தவர்களே மீண்டும் மத்தியில் ஆட்சி செய்ய மக்கள் விரும்புகிறார்கள்’ என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.