விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணத்தை திருடிவிட்டு கடைக்கு தீ வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரசபோத்தி என்பவர் கைகாட்டி கோயில் பஜாரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த இரு இளைஞர்கள், 6 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு கல்லாப் பெட்டியை கால்வாயில் வீசியுள்ளனர்.
பின்னர் கடைக்கு தீ வைத்து விட்டு, அப்பகுதியில் இருந்த 3 சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். இதில் கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.