திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மருத்துவமனையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
பெருமாள்பேட்டையை சேர்ந்த வேலு என்பவரது மகள் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகளை பார்க்க சென்ற வேலு, மருத்துவமனை வளாகத்தின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.