திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காணாமல் போன செப்பேடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
அன்பில் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பழமையான செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் மன்னர் சுந்தரசோழன் தனது அமைச்சருக்கு நிலம் வழங்கியது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் திடீரென காணாமல் போன செப்பேட்டை அதிகாரிகள் பல ஆண்டுகளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி செப்பேடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.