இந்திய கூட்டணி சிதறும் விதைகள் என பாஜக எம்பி மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணி ஏற்கனவே 380 இடங்களை தாண்டிவிட்டதாகவும், 400க்கு மேல் வெற்றி பெறுவதை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் இதயங்களில் பிரதமர் மோடி இருப்பதாகவும் மனோஜ் திவாரி கூறினார்.