தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு உதகை ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை திரும்பினார்.
கடந்த 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, உதகையிலுள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த அவர், சாலை மார்க்கமாக கோவை சென்றடைந்தார்.
பின்னர், கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.