ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி வீட்டின் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சிதம்பரம் காலனி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.