புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான இவர், மூர்த்தி என்பவருடன் சேர்ந்து இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த சிலருடன் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் அடித்துகொலை செய்யப்பட்டார். இது குறித்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அசோக் பரணி, ஸ்ரீகாந்த் ஆகிய 4 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலைய சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.