வரத்து குறைவு காரணமாக ஏலக்காய் விலை கிலோ 3 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் கடந்த மாதம் போதிய மழை இல்லாததாலும், ஏற்றுமதி கொள்முதல் அதிகரித்ததன் காரணமாகவும் ஏலக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ ஏலக்காய் 3 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.