பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால், வாசனுக்கு 10 ஆண்டுகளுக்கு இரு சக்கர வாகனம் ஒட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும்போது காரில் செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது போன்ற வீடியோவை, வாசன் யூடியூபில் பதிவிட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரிலும், மதுரை போலீசார் வாசனை கைது செய்தனர். இதனிடையே, “தன்னால், பொது மக்கள் யாரும் பாதிக்கவில்லை” எனவும், “மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ள வாசன், “ஜூன் மாதம் முதல் வாராத்தில் திரைப்பட சூட்டிங் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்” கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.