ஜம்மு அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பூஞ்ச் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் பள்ளத்தாக்கில் திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 21 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை, மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.