வரி செலுத்துவோர் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அப்படி இணைக்காவிட்டால், ஜூன் 1ஆம் தேதி முதல் இரு மடங்கு கட்டணத்தில் டிடிஎஸ் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித் துறை கூறியுள்ளது.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என வலியுறுத்திய மத்திய அரசு, அதற்கான அவகாசத்தை பலமுறை நீட்டித்தது.
இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.