திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் போற்றப்படுகிறது.
கோடை விடுமுறை நிறைவு மற்றும் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்க உள்ள நிலையில், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர். கடலில் புனித நீராடி 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.