அரியலூரில் உள்ள ரயில் நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரயில் நிலைய சுகாதாரத்துறை சார்பில் புகையிலை பயன்படுத்துவன்மூலம் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைமேடையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று, ரயில் பயணிகளுக்கு இது தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரயில்நிலைய பாதுகாப்பு காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.