மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
மக்களவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்துள்ள நிலையில், நாடு மற்றும் மக்கள் நலனுக்காக பாஜக முக்கிய தலைவர்கள் கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.