அம்பானி வீட்டு கல்யாணம் ஆடம்பர கப்பலில் குவிந்த பிரபலங்கள்!
Sep 9, 2025, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பானி வீட்டு கல்யாணம் ஆடம்பர கப்பலில் குவிந்த பிரபலங்கள்!

Web Desk by Web Desk
May 31, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமண விழா, கடந்த மார்ச் மாதமே களை கட்டத் தொடங்கியது. இப்போது திருமணத்துக்கு முன் நடக்கும் இரண்டாவது விழா ஆடம்பர கப்பலில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் திருமணம் நடைபெறுகிறது. மும்பையில், BKC வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பாரம்பரிய இந்து வேத முறைப்படி திருமண விழா நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய முதல் விழா நடைபெற்றது. MICROSOFT நிறுவனர் பில் கேட்ஸ், FACEBOOK நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் , பிரபல பாடகி ரிஹானா, பஞ்சாபி பாடகர் தில்ஜீத், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா என பல நாடுகளின் தொழில் அதிபர்கள் மற்றும் பல இந்தி திரைப்பட பிரபலங்கள் ஜாம் நகரில் நடந்த திருமணத்துக்கு முந்தைய முதல் விழாவுக்கு வந்திருந்தனர்.
இவ்விழாவில், கிராமி விருது பெற்ற பாடகி ரிஹானா முதல் முறையாக இப்படி ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது , ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய இரண்டாவது விழா ஆடம்பர கப்பலில் நடைபெற்றது. பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பிற விருந்தினர்கள் பங்கேற்ற இந்த ஆடம்பர கப்பல் பயணம், இத்தாலியில் தொடங்கி ,பிரான்சில் நிறைவடைந்தது.

இத்தாலியில் இருந்து தெற்கே பிரான்ஸ் நோக்கி பயணித்த ஆடம்பரமான கப்பல் பயணத்தில் கொண்டாட்டங்கள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றன. உயர்தர வசதிகள் உடைய இந்த கப்பலில், சுமார் 800 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.

மூன்று நாள் பயணத்தின் இரண்டாவது நாளை, ‘ஒரு ரோமன் விடுமுறை’ என்று அழைக்கப்படும் கப்பலில், விருந்தினர்கள் புதுப்பாணியான சுற்றுலா ஆடைகளை அணிந்திருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆடம்பர கப்பலில் நடக்கும் திருமணத்துக்கு முந்தைய விழா தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

ஷாருக் கான், அவரது மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான், ஆலியா பட், ரன்பீர் கபூர், அவர்களது மகள் ரஹா கபூர், ரன்வீர் சிங், கரீனா கபூர், கரிஷ்மா கபூர், கரண் ஜோஹர், அனன்யா, பாண்டே, ஜான்வி கபூர், தந்தை போனி கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமான ஓர்ஹான் அவத்ரமணியம், கிரிக்கெட் வீரர்கள் M S DHONI ,SACHIN TENDULKER என புகழ் பெற்ற பலரும் இந்த ஆடம்பர கப்பல் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக , BACK STREET BOYS என்ற பிரபல அமெரிக்க இசைக்குழு இத்தாலியில் கப்பலில் விருந்தினர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்திய வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. அந்த இசைக்குழுவைச் சேர்ந்த Nick Carter, Howie Dorough, Brian Littrell, AJ McLean, மற்றும் Kevin Richardson முழு வெள்ளை உடைகளில் BACK STREET BOYS-ன் பிரபல பாடலான I Wanna என்ற பாடலை இசைத்தனர்.

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பிதழும் வெளியாகியுள்ளது.

அதாவது, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தம் திருமணச்சடங்குகள் நடைபெறுகிறது. மறுநாள் ஜூலை 13 ஆம் தேதி, சுப ஆசீர்வாதம் என்ற பெயரில் மணமக்களுக்கு பெரியவர்கள் ஆசீர்வாதம் வழங்கும் மங்கள நிகழ்வு நடைபெறுகிறது ஜூலை 14 ஆம் தேதி மங்கள் உத்சவ் என்ற பெயரில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது என்று அம்பானி வீட்டு திருமண அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு ஆடை பரிந்துரையும் அம்பானி குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் அம்பானி வீட்டுத் திருமணத்தை உலகமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

Tags: Ambani's house wedding celebrities gathered on the luxury ship!
ShareTweetSendShare
Previous Post

ரூ. 1,000 கோடிக்கான ஒப்பந்தம்! – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?

Next Post

மக்களவைத் தேர்தல் : 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு!

Related News

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies