இளம் வயது வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் வாக்களித்து சாதனை படைப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை துடிப்பு மிக்கதாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான 7ஆம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.