ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி அருகே போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தியதில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 61 லட்சத்து 49 ஆயிரம் 500 ரூபாயை கைப்பற்றினர்.
இதேபோல், சென்னையில் இருந்து தெலுங்கானாவுக்கு மற்றொரு காரில் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை கிலோ தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க கட்டிகளை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.