தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அபர்ணா என்ற 4 வயது சிறுமி 7 உலக சாதனை விருதுகள் பெற்று அசத்தியுள்ளார்.
மாறாந்தை கிராமத்தை சேர்ந்த மகாராஜா- சுபா தம்பதியினரின் 4 வயது குழந்தை அபர்ணா, 40 வித தலைப்புகளில் பேசி கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட், ஒரு நிமிடத்தில் 100 விலங்குகளின் பெயர்களை கூறி “இந்தியா புக் ஆப் ரெகார்ட்” உள்ளிட்ட 7 உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மேலும், மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்து ’’இளம் தமிழ் பேச்சாளர் 2024’’ விருதையும் தட்டிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் சுபா கூறுகையில், பெற்றோர், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கினால் குழந்தைகளின் திறமை வளரும் எனத் தெரிவித்தார்.