திருப்பத்தூர் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகளின் தங்கும் விடுதி, கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாததால் மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏலகிரி மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக பழங்குடியினர் நலத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை விடுதி திறக்கப்படாததால், மாணவிகளின் படிப்பு தடைபடுவதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.