சங்கரன்கோயில் அருகே நிலப்பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் விடுக்கும் பஞ்சாயத்து உறுப்பினரின் வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் குலசேகரமங்கலம் 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினர் வேல்சாமியின் தங்கை மற்றும் அவரது கனவருக்கும் இடையே பூர்வீக நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சேர்ந்தமரம் மெயின் பஜாரில் செல்வத்தை அரிவாளை காட்டி வேல்சாமி மிரட்டியுள்ளார். இதனையடுத்து வேல்சாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.