அரியலூர் அருகே திரௌபதி அம்மன் கோவில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிலம்பூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், பக்தர்கள் வரிசையில் நின்று, அம்மன் முன்பு சாட்டையடி வாங்கினர்.