வேலூர் அருகே குடிபோதையில் கண்டெய்னர் லாரியை இயக்கி விபத்து ஏற்படுத்திய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி குடியாத்தம் பகுதியில் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மின்கம்பம் சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.