சென்னையில் துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
கடந்த 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சராசரி வெப்பநிலையை விட, தற்போது 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் இது ஒரு ஆபத்தான போக்கு என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இனிவரும் ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கம் இருமடங்காக அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட காலநிலை இடர் மதிப்பீட்டு வரைவு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கான புதிய வெப்ப செயல்திட்ட வரைவு அறிக்கையை 2023 -ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. ஆனால், அதனை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை என அன்புமணி கார் கூறியுள்ளார். எனவே, தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகளுக்கான வெப்பச் செயல்திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்” எனவும்,
காஞ்சிபுரம் மாநகராட்சி, மீஞ்சூர், திருமழிசை, செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் வெப்பச் செயல்திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.