தமிழகத்தில் பாஜக தடம் பதிக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கெனவே பாஜக வென்ற மாநிலங்களில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், ஒடிசாவில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் ஜெ.பி. நட்டா கூறினார்.
தெலங்கானாவில் பாஜகவின் தொகுதிகள் இரட்டிப்பாகும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக வெற்றி கணக்கை தொடங்கும் என்று கூறியுள்ளார்.