“முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்களை கைது செய்வதும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை விழா நாயகனாக கொண்டாடுவதும், திமுக வாடிக்கையாக கொண்டுள்ளதாக தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 2014-ல் மோடியை எதிர்க்கிறார் என்பதால் மட்டுமே, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருது வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பிரதமர் மோடியை அநாகரீகமாக கேலி செய்தும், ஒருமையிலும் பிரகாஷ்ராஜ் அந்த விழாவில் பேசியுள்ளார்” என குற்றம் சாட்டியுள்ளது.
“திராவிட மாடல் ஆட்சி மீதும், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீதும் விமர்சனம் செய்தாலோ, அல்லது சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தாலோ அவர்களை திமுக அரசு உடனடியாக கைது செய்கிறது” என்றும்,
அதே வேளையில், “உலகமே போற்றும் மோடியை, பிரகாஷ்ராஜ் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது, திமுக ரசித்து மகிழ்வது நியாயமா?” என்று தமிழக பாஜக சரமாரியாக கேள்வி எழுப்புள்ளது.
“முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்காட்சியை அமைச்சரை கொண்டு திறந்து வைக்காமல், பிரகாஷ் ராஜை வைத்து, திமுக அமைச்சர் சேகர்பாபு திறக்க வைத்துள்ளது” என தமிழக பாஜக குற்றச்சாட்டியுள்ளது.
“வரலாறு தெரியாத நாகரீகம் அற்ற, சுய லாபத்திற்காக அரசியல் பேசி பிழைப்பு நடத்தும் கோமாளிகளை வைத்து விழா நடத்துவது தான் திராவிட மாடலா?” என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.