திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கியிருக்கும் அவர், முழங்கால் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஜூன் 20-ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை தலாய் லாமா எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.