தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.
இதனையொட்டி வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
















