சென்னை அண்ணா அறிவாலயத்தில் இண்டி கூட்டணி கொடியை திமுக ஆதரவாளர்கள் அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இண்டி கூட்டணி கொடியுடன் வந்த நபரை திமுக ஆதரவாளர்கள், அந்த கொடியை அகற்ற சொல்லி, கொடியை அகற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் வெற்றியை காலை முதலே தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து இண்டி கூட்டணி கொடியுடன் வந்த நபரை திமுக ஆதரவாளர்கள் அகற்ற சொல்லினர். இதனைத் தொடர்ந்து அந்த கொடி அகற்றப்பட்டது. இந்த கொடியை அகற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.