“புதிய அமைச்சரவையில் தமிழக பாஜகவினர் இடம்பெறுவதை பிரதமர் மோடி தான் தேர்வு செய்வார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எச். ராஜா,
எதிர்பார்த்த வெற்றி வரவில்லை, ஆனாலும் வெற்றி வெற்றி தான். 3-ஆவது முறை மோடியின் வெற்றிக்கு பத்து ஆண்டுகால சாதனைதான் காரணம். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தம்தான்.
என்டிஏ கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்தது மிகப் பெரிய வெற்றி. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. பதவிப் பற்றோடு செயல்படுபவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அமைச்சரவையில் தமிழக பாஜகவினர் இடம்பெறுவதை பிரதமர் முடிவு செய்வார் என தெரிவித்தார்.