தஞ்சை பெருவுடையார் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மஹா நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளி உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.